பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக 'ஷூ' - அமைச்சர் அறிவிப்பு!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக 'ஷூ' வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
 | 

பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக 'ஷூ' - அமைச்சர் அறிவிப்பு!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக 'ஷூ' வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு செருப்புக்கு பதிலாக 'ஷூ' வழங்கப்படும். 

2018-19ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 3 மாதத்திற்குள் மடிக்கணினி வழங்கப்படும். அதேபோன்று தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 10.40 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது. 

மேலும், பள்ளிக்கல்வித்துறைக்கென விரைவில் தனி தொலைக்காட்சி ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதேபோன்று, அரசுப்பள்ளிகளின் வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ ட்யூப்பில் பதிவேற்றம் செயவதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வழிவகுக்கும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP