வெயில் : சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைய ஒரு வார காலம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
 | 

வெயில் : சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைய ஒருவார காலம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

தென்மேற்கு பருவக்காற்று அரபிக்கடல் பகுதியில் வலுவடைந்து இருப்பதாலும், தெற்கு அரபிக்கடலில் லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக் கடல் பகுதிகளில் மேகங்கள் அதிகரித்திருப்பதாலும் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று துவங்கியுள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தின் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன மழையும், மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 செ.மீ. மழையும், தருமபுரி, மதுரை மாவட்டங்களில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் இயல்பைவிட 3 லிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை அதிமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 42டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், வேலூர், மதுரை மாவட்டத்தில் 41 டிகிரி செல்சியஸும், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை மழை பெய்ய வாய்ப்பில்லை. வெப்பத்தின் தாக்கம் குறைய இன்னும் ஒரு வார காலமாகும்" என இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP