அதிர்ச்சி தகவல் : முறையற்ற உறவால் 1,459 கொலைகள்; ஆபாச படங்களை பார்ப்பதால் குற்றங்கள் அதிகரிக்கிறதா?

தமிழகத்தில் முறையற்ற உறவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள் நடந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அதிர்ச்சி தகவல் : முறையற்ற உறவால் 1,459 கொலைகள்; ஆபாச படங்களை பார்ப்பதால் குற்றங்கள் அதிகரிக்கிறதா?

முறையற்ற உறவுகள் காரணமாக, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள் நடந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற உறவுகள் காரணமாக சென்னையில் 158, பிற மாவட்டங்களில் 1,301 கொலைகளும், முறையற்ற உறவால் கடத்தல், மிரட்டல், தாக்குதல் என சென்னையில் 213 குற்றங்களும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 621 குற்றச்சம்பவங்களும் நடந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்ஃபோனில் ஆபாச படம் பார்க்க முடிவதால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதா என விசாரிக்க வேண்டும் என்றும், முறையற்ற உறவால் தாயே குழந்தையை கொலை செய்யும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். முறையற்ற உறவுகள், திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பை பாதிக்கும் சமூக பிரச்னையாக உருவெடுத்து வருவதாகவும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP