பிக்பாஸ் பிரபலத்திற்கு மறைமுக வாழ்த்து தெரிவித்த சேரன்..

தனியார் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், சேரன், கவின், லாஸ்லியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 | 

இதில் சேரனை அப்பா என்று அழைத்த லாஸ்லியா அவரிடம் மிகவும் பாசமாக பழகிவந்தார். அதேபோல், சேரனும் தனது மகள் போன்றே லாஸ்லியாவை பார்த்துக்கொண்டார். அவ்வபோது, அவருக்கு அப்பா என்ற முறையில் அறிவுரைகளை கூறி அன்பாக நடத்தி வந்தார். இந்நிலையில், லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் அப்பா மகள் உறவுக்குள் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. இதனால் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் லாஸ்லியாவை திட்டி தீர்த்து வந்தனர்.

பிக்பாஸ் பிரபலத்திற்கு மறைமுக வாழ்த்து தெரிவித்த சேரன்..

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிகழ்ச்சி முடிந்தும், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் அபிராமி சேரனை நேரில் சந்தித்த போட்டோ இணையத்தில் ட்ரெண்டானது. இப்படி பலர் சேரனோடு தொடர்பில் இருந்தாலும் அப்பா என்று அழைத்து வந்த லாஸ்லியா மட்டும் தொடர்புக்கு அப்பாலேயே இருக்கிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சேரன் ” எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன நான் ஒருவருக்குமட்டும் சொல்லமுடியாமல் போனது மனதுக்கு வருத்தமளிக்கிறது. எங்கிருந்தாலும் மகளாகிய நீயும் தங்கைகளும் அம்மா அப்பாவும் நல்லா இருக்கனும்.. விரைவில் உங்கள் ஆசைக்கான இலக்கை அடைவீர்கள். அதை நான் பார்ப்பேன். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். ” என கூறியுள்ளார். இது லாஸ்லியாவுக்கான பதிவு என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP