சுதந்திரதினத்தை முன்னிட்டு பாதுகாப்புகள் தீவிரம்

நாளை நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது.
 | 

சுதந்திரதினத்தை முன்னிட்டு பாதுகாப்புகள் தீவிரம்

நாளை நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. இதற்காக நாட்டின் அனைத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 15000 போலீஸார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். சுதந்திர தின நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் 2000 பேர் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். அதோடு அங்கு 5 அடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. 

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அணுமதிக்கப் படுகிறார்கள். குறிப்பாக ரயில் நிலையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப் பட்டுள்ளது. அதோடு வழிப்பாட்டு இடங்கள், மால் மற்றும் தியேட்டர்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP