தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:  பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. 

இதுதொடர்பக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று’ அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விலையில்லா புத்தகங்கள் தங்களின் தேவை பட்டியலின்படி பெறப்பட்டுள்ளதா என சி.இ.ஓ.க்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், 2,3,4,5,6,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட நூல்கள் 2019-20-ஆம் கல்வியாண்டில் வழங்க வழங்க நடவடிக்கை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP