கோழிப்பண்ணைகளாக பள்ளிகள்! நீதிபதி வேதனை

நாமக்கல் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
 | 

கோழிப்பண்ணைகளாக பள்ளிகள்! நீதிபதி வேதனை

நாமக்கல் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

கடலூர் அருகே வடலூரில் புத்தகக் கண்காட்சியில் ஒன்றில் நூல் வெளியீட்டில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், "மக்கள் அவசியத்திற்காக போராடுவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அனாவசியத்திற்காக போராடக்கூடாது. கல்வி வியாபாரமாகிவிட்டது. நாமக்கல் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுகின்றன. பல லட்சங்கள் கொடுத்து மருத்துவர், இன்ஜினியராக வேண்டும் என குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். மருத்துவர் ஆக வேண்டும் என்ற மனநிலையிலே குழந்தைபருவம் முதல் மாணவர்களும் வளர்கின்றனர். இறுதியில் கனவு கலையும்போது மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. பள்ளி, கல்லூரிகளில் மகிழ்ச்சியான சூழல் உருவாகிறது என்றால் அதுதான் மகிழ்ச்சியான சமுதாயமாக அமையும். 

தமிழ்மொழியே கடல்கடந்து பேசக்கூடிய தொன்மையான மொழி, தமிழ் மொழியை நாம் பறைசாற்றவேண்டும். கிராமத்தில் படித்தாலும், தமிழ் வழியில் படித்தாலும் நன்நடத்தை மட்டுமே உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP