தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது

தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது

தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.

நான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று கழகத்தினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக வருவது ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP