பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
 | 

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்,  பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும், பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை தாமதமின்றி அகற்றவேண்டும். பள்ளிகளில் வழக்கமாக சுத்தம் செய்யப்படும் விவரம் அடங்கிய அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் சுத்தம் செய்யும் நிகழ்வு நடத்த வேண்டும். தூய்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பள்ளிகளில் தூய்மைக்காக தூதுவர்களையும் நியமிக்கவேண்டும்.

பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காத சூழல், தேங்காய் ஓடுகள், பயன்பாடற்ற கழிவு பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரல் காய்ச்சல் தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் காலை நேர இறை வாழ்த்து நிகழ்ச்சியில் தெரிவிக்கவேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP