ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 | 

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பயோ- மெட்ரிக் முறை அமலுக்கு வர உள்ளது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் தங்களது விவரங்களை ஐ.எம்.இ.எஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதேபோன்று மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதால், அவர்களது புகைப்படம் மற்றும் விபரங்களை பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களிடம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் சாவ்லா, வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்துரையாடினார். ஆன்லைனில் பதிவேற்றம் செய்த தகவல்களின் அடிப்படையிலேயே இடமாறுதல், கலந்தாய்வு, பொது வழிமுறைகள், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP