சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை : அமைச்சர் தடாலடி

’சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். அதிமுகவில் அவருக்கு இடமில்லை’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 | 

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை : அமைச்சர் தடாலடி

’சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். அதிமுகவில் அவருக்கு இடமில்லை’ என்று வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். அதிமுகவில் அவருக்கு இடமில்லை. சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது. புதுக்கோட்டையில் வனத் துறை  நட்ட யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவது பற்றி 10 -ஆம் தேதி கருத்துக்கேட்கப்படும். சுற்றுச்சூழலுக்கு தீமை பயக்கும் என மக்கள் கருதினால் யூகலிப்டஸ் மரங்களை கருத்துக் கேட்டு அகற்றுவோம். வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கிறோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP