சசிகலா கேட்டுக்கொண்டதால்தான் பொது செயலாளர் ஆக்கினோம்- அமைச்சர் தங்கமணி

நாங்கள் சசிகலாவை பொது செயலாளர் ஆக்கியது உண்மை தான். அதிமுகவில் பிளவு ஏற்பட்டு திமுகவிற்கு சாதகமான சூழல் உருவாகக்கூடாது என்பதற்காகதான் தன்னை பொது செயலாளர் ஆக்கவேண்டும் என எங்களை சசிகலா கேட்டுக்கொண்டார் என தங்கமணி கூறினார்
 | 

சசிகலா கேட்டுக்கொண்டதால்தான் பொது செயலாளர் ஆக்கினோம்- அமைச்சர் தங்கமணி

நாங்கள் சசிகலாவை பொது செயலாளர் ஆக்கியது உண்மை தான். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு தி.மு.கவிற்கு சாதகமான சூழல் உருவாகக்கூடாது என்பதற்காகதான் தன்னை பொது செயலாளர் ஆக்கவேண்டும் என எங்களை சசிகலா கேட்டுக்கொண்டார். அதனால்தான் சசிகலாவை பொது செயலாளர் ஆக்கினோம் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, “நாங்கள் சசிகலாவை பொது செயலாளர் ஆக்கியது உண்மை தான். காரணம் எங்களை விட 20 எம்.எல்.ஏக்கல் தான் தி.மு.கவில் அதிகம். ஆகவே அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு தி.மு.கவிற்க்கு சாதகமான சூழல் உருவாகக்கூடாது என்பதற்காக தன்னை பொது செயலாளர் ஆக்கவேண்டும் என எங்களை கேட்டுக்கொண்டதால் சசிகலாவை பொது செயலாளர் ஆக்கினோம். 20 தொகுதியை வென்று ஆட்சியை பிடிக்கலாம் என தி.மு.க எண்ணுகிறது. இதுபோன்ற திட்டத்தை டிடிவி தி.மு.கவுடன் சேர்ந்து போட்டு வருகிறார்.

இது ஒரு மினி பொது தேர்தல். 20 தொகுதியில் நடைபெறும் இடைதேர்தலில் வெற்றி பெற்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் நம்மை தேடி வரும் சூழல் உருவாகும். ஆர்.கே.நகரில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என எண்ணிக்கொண்டிருந்தோம் ஆனால் நடந்தது வேறு! ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்து கொண்டு அதிமுகவினர் இடைதேர்தலில் பணியாற்ற வேண்டும்.

 20-தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து நாங்கள் பயப்படுவதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் எப்போதும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். எங்களுக்கு தேர்தலை சந்திக்க எந்த பயமும் இல்லை. எப்போது இடைதேர்தல் வந்தாலும் 20 தொகுதியிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். 20 தொகுதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவருக்கும் எந்த முரண்பாடும் இல்லை” என்று கூறினார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP