சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! வழக்கின் முழு விபரம் உள்ளே...

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவஜோதி, தனது தாயார் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை சரவணபவன் ஹோட்டலில் மேலாளராக வேலை செய்தவர். இதன் மூலமாக, ஜீவஜோதியின் குடும்பத்திற்கும், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
 | 

சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! வழக்கின் முழு விபரம் உள்ளே...

2001ம் ஆண்டு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை  உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கின் முழு விபரம் பின்வருமாறு:-

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவஜோதி, தனது தாயார் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை, சரவணபவன் ஹோட்டலில் மேலாளராக வேலை செய்தவர். இதன் மூலமாக, ஜீவஜோதியின் குடும்பத்திற்கும், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜீவஜோதியின் குடும்பத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த ராஜகோபாலுக்கு, ஜீவஜோதியின் மீது ஆசை ஏற்பட்டது. 

ஆனால், ஜீவஜோதி வேளச்சேரியைச் சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது ராஜகோபாலுக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து, ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை அழைத்து மிரட்டியுள்ளார். ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும்., சாந்தகுமாரை விலகும்படியும் கூறியுள்ளார். 

சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! வழக்கின் முழு விபரம் உள்ளே...

ஆனால், சாந்தகுமார் இதற்கு அஞ்சவில்லை. இதற்கு சம்மதிக்க முடியாது என்றும் நேருக்கு நேராக மறுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி சாந்தகுமார் கடத்தப்பட்டார். கணவரை காணவில்லை என்று ஜீவஜோதி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் தீவிரமாக தேடியதில், 5 நாட்களுக்கு பிறகு கொடைக்கானல் மலையில் சாந்தகுமாரின் உடல் சடலமாக கிடைத்தது. 

போலீசார் விசாரித்ததில், சாந்தகுமாரை சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் கடத்தி வந்ததும், வரும் வழியிலே அவரை கழுத்தை நெறித்து, கொடுமைப்படுத்தி கொலை செய்து, கொடைக்கானல் மலையில் தூக்கி வீசியதும் தெரிய வந்தது. 

இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், கடந்த 2004ல் ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு ‌கடுங்காவல் சிறை‌த்த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை சிறைத்த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இதுதவிர, சாந்தகுமாரை கட‌த்திய வழ‌க்‌கி‌லும் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம், ம‌ற்ற 8 பேரு‌க்கு இர‌ண்டு ஆ‌‌ண்டுக‌ளும்  சிறைத்த‌‌ண்டனை ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. 

அதன்படி, ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீன் பெற்று ராஜகோபால் வெளியே வந்தார்.

சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! வழக்கின் முழு விபரம் உள்ளே...

இ‌ந்த தீர்ப்பை எதிர்த்து, செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தில் ராஜகோபால் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். அதே நேரத்தில், அரசு தரப்பில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை, ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இ‌ந்த வழ‌க்‌கி‌ல், 2009ல் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌ நீ‌திபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, பூந்தமல்லி ‌நீ‌திம‌ன்ற‌ம்  அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை, ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரித்து தீர்ப்பளித்தனர். 

இதனை எதிர்த்து, ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சூழ்நிலையில், ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. சாட்சியங்கள் வலுவாக இருப்பதாலும், அரசு தரப்பு தொடர்ந்து ராஜகோபாலுக்கு எதிராக இருந்ததாலும், ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளது. மேலும், வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP