சங்கரன்கோவில் தொகுதியை திருநெல்வேலியுடன் இணைக்க வேண்டும்: வைகோ கோரிக்கை!

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி, நெல்லையுடன் இருக்கும் வகையில் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 | 

சங்கரன்கோவில் தொகுதியை திருநெல்வேலியுடன் இணைக்க வேண்டும்: வைகோ கோரிக்கை!

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி, நெல்லையுடன் இருக்கும் வகையில் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதிமுகவின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என்று கடந்த ஜூலை 18ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

புதிதாக உருவாக்கப்படும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் ஆகிய வருவாய் வட்டப் பகுதிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சங்கரன்கோவில் தொகுதியை திருநெல்வேலியுடன் இணைக்க வேண்டும்: வைகோ கோரிக்கை!

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் பகுதிகளில் உள்ள 90% மக்கள் தங்களது பகுதிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். 

சங்கரன்கோவில் நகரில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை. குறைவான போக்குவரத்து வசதிகளே உள்ளன. இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பேருந்துகள் கிடையாது. மேலும் கல்வி மற்றும் வேலைக்காக இப்பகுதியை சேர்ந்த பலர் தினமும் திருநெல்வேலி சென்று வருகின்றனர். திருநெல்வேலிக்கு தொடர் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

எனவே, இந்தப் பகுதிகள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைத்திட வேண்டும்" என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP