குப்பைக் கிடங்கில் சந்தியாவின் தலையை தேடும் பணி தீவிரம்..

சென்னையில் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்ட சந்தியாவின் தலையை தேடும் பணியில் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

குப்பைக் கிடங்கில் சந்தியாவின் தலையை தேடும் பணி தீவிரம்..

சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்ட சந்தியாவின் தலையை தேடும் பணியில் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை  ஜாபர்கான்பேட்டையில் வசித்து வருபவர் திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன். தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பவரை திருமணம் செய்த கொண்ட இவர், சந்தேகம் காரணமாக அடிக்கடி சந்தியாவை கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக, சந்தியாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டி குப்பை கிடங்கிலும், கூவத்திலும் வீசியுள்ளார். 

குப்பைக் கிடங்கில் சந்தியாவின் தலையை தேடும் பணி தீவிரம்..

இதில், குப்பை கிடங்கில் வீசப்பட்ட சந்தியாவின் கை மற்றும் கால்கள் தான் இந்த வழக்கிற்கு முதற்புள்ளி வைத்தது. கடந்த ஜன.21ம் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணில் கை, கால்களை கண்ட கூலி தொழிலாளிகள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர். அடையாளம் காண முடியாமல் மிகுந்த குழப்பம் அடைந்தனர். 

குப்பைக் கிடங்கில் சந்தியாவின் தலையை தேடும் பணி தீவிரம்..

தொடர்ந்து 2 வாரங்களாக தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, பெண்ணின் கையில் இருந்த அடையாளம் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து, அவர் சந்தியா என்பதை கண்டுபிடித்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

குப்பைக் கிடங்கில் சந்தியாவின் தலையை தேடும் பணி தீவிரம்..

விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக சந்தியாவை கொலை செய்து, அவரை துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகத்தை கூவத்திலும், தலை மற்றும் கை, கால்களை பெருங்குடி குப்பை கிடங்கிலும் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மாலை கூவத்தில் இருந்து உடல் பாகம் மீட்கப்பட்டது. 

இந்நிலையில், பெண்ணின் தலை பகுதியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாலகிருஷ்ணனில் வாக்குமூலம் அடிப்படையில் குப்பை கிடங்கில் மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், 20 தினக்கூலி தொழிலாளர்கள்  தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP