சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இடமாற்றத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரோகிணி. ஐ.ஏ.எஸ்., சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இடமாற்றத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரோகினி. ஐ.ஏ.எஸ்., சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, ஒட்டப்பட்ட  போஸ்டர்களினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சேலம் மாவட்ட ஆட்சியராக திருமதி. ரோகினி அவர்கள் கடந்த 28.8.2018 அன்று சேலம் மாவட்டத்தில் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டார். 

பள்ளிக்குழந்தைகள் முதல் வயதான தள்ளாடும் வயதில் உள்ள முதியவர்கள் வரை அவர்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டு சேலம் மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்று அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கின்ற வகையில் இன்முகத்தோடு பணிகள் தொய்வின்றி செயல்பட்டவர்

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகினி பணியிட மாற்றம் செய்தியை கேட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களின் முகத்தில் ஒரு சோகம் தென்பட்டது. தற்போது அவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இடமாற்றத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

இந்தப் பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் சேலம் மாநகர் முழுவதும் தமிழக அரசை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டரில் நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட பெண் ஆட்சித்தலைவர் ரோகிணி அவர்கள் பணி இடமாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீண்டும் ரோகினி அவர்களை ஆட்சித்தலைவராக பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசை கண்டித்து வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்த கண்டன போஸ்டர்கள் சேலம் மாநகரப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP