எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்!

தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89.
 | 

எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்!

தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. 

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டில் பிறந்தார் முத்தையா. இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். 1951 இல் டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து, ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 

சென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள் எழுதியவர். 'தி இந்து' பத்திரிகையில் சென்னை குறித்த வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதுதவிர, 'சென்னை ம்யூஸிங்ஸ்' என்ற இலவச பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில், சென்னை குறித்த பல அரிய தகவல்கள் இடம்பெறும். 

தற்போது சென்னையில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP