திருப்பதியில் ரெளடி வெட்டி கொலை! அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

திருப்பதி சாலையில் பக்தர்கள் கூட்டத்தில் ரவுடி வெட்டி படுகொலை..
 | 

திருப்பதியில் ரெளடி வெட்டி கொலை! அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் திருமலை பைபாஸ் சாலை என்போதும் மக்கள் மற்றும் பக்தர்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும். அப்பகுதியில் நேற்று இரவு சுமார் 8:30 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் மடக்கிபிடித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

திருப்பதியில் ரெளடி வெட்டி கொலை! அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

காயமடைந்தவரின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்ததால் தாக்குதல் நடத்திய இருவர் தப்பியோடினர். தகவல் அடிப்படையில் அங்கு விரைந்த திருப்பதி நகர போலீசார் படுகாயம் அடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. திருப்பதியில் ரெளடி வெட்டி கொலை! அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

பல்வேறு வழக்குகளில் குற்றவாளியான ரவுடி பெல்ட் முரளி என்பவர் தான் கொலை செய்யப்பட்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP