திமுக பிரமுகர் வீட்டில் திடீர் ரெய்டு..கட்டு கட்டாக சிக்கிய ரூ.1000 நோட்டுகள்..

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ. இவரது மகன் ஆனந்தன். இவரும் திமுக கட்சியில் உள்ளார்.
 | 

திமுக பிரமுகர் வீட்டில் திடீர் ரெய்டு..கட்டு கட்டாக சிக்கிய ரூ.1000 நோட்டுகள்..

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ. இவரது மகன் ஆனந்தன். இவரும் திமுக கட்சியில் உள்ளார். இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள ஆனந்தன் வீட்டில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 

இரவு நேரத்தில் நடைபெற்ற அதிரடி சோதனயில் ரூ.2,68,000 மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும்  காகித ரூபாய் நோட்டுகள் போன்ற காகிதப் பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தப் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கொண்டு மோசடி செய்ய திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. 

திமுக பிரமுகர் வீட்டில் திடீர் ரெய்டு..கட்டு கட்டாக சிக்கிய ரூ.1000 நோட்டுகள்..

இந்த பங்களாவில்,  திரைப்படம் மற்றும் சில நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மத்தியப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP