கோவை சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 | 

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, காணாமல் போனார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதற்கு மறுநாள், சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிறுமி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தும் உத்தரவிட்டுள்ளார். 

முதல்வர் பழனிச்சாமியின் அறிக்கை:

கோவை சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP