மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.5000: தமிழக அரசு அறிவிப்பு!

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 | 

மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.5000: தமிழக அரசு அறிவிப்பு!

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கடந்த காலத்தைப் போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம்  மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும். நிவாரணத் தொகையாக ரூ.83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மீன்பிடி தடைக்காலத்தில் 13 கடலோர மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக நிவாரணம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP