நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.30 கோடி நிவாரண நிதி! - முதல்வர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியினை ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 | 

நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.30 கோடி நிவாரண நிதி! - முதல்வர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியினை ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மனதில் முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் கனமழையால் பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ.4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையினால் அம்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP