தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்

தமிழ்நாட்டில் தற்கொலைகளை தடுப்பதற்கான புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்

தமிழ்நாட்டில் தற்கொலைகளை தடுப்பதற்கான புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,  உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம்  செலுத்த உள்ளது என்றும் இதற்காக புதிய திட்டம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.  குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP