மீட்பு பணியில் பின்னடைவு: அடுத்தக்கட்டமாக சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித்தை நவீன கருவி மூலம் மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 | 

மீட்பு பணியில் பின்னடைவு: அடுத்தக்கட்டமாக சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித்தை நவீன கருவி மூலம் மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித்தையை கயிறு கட்டி தூக்க தேசிய பேரிடர் குழுவினர் முயற்சித்தனர். ஆனால் குழந்தையின் மீது சிறிதளவு மண் இருப்பதால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து ஸ்னேக் பைட் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம் குழந்தையை மீட்க முயற்சிகள் நடைபெற்றது. ஹைட்ராலிக் என்ற கை போன்ற கருவி மூலம் குழந்தையின் கையை கவ்வி மேலே இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

தற்போது, குழந்தை சுர்ஜித் சுமார் 80 அடி ஆழத்திற்கு சென்று விட்டான். அடுத்தக்கட்டமாக குழந்தை சுர்ஜித்தை மீட்க என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி என்ற தனியார் அமைப்புடன் இணைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் குழந்தை சிக்கி இருக்கும் கிணறுக்கு அருகே சுரங்கம் போல 80 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதன் வழியாக உள்ளே சென்று குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP