கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 10 பேர் மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் படகு நீரில் மூழ்கியதில் காணாமல் போன 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
 | 

கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 10 பேர் மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் படகு  நீரில் மூழ்கியதில் காணாமல் போன 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கீழராமநல்லூரில் இருந்து 30 பேருடன் கொள்ளிடம் ஆற்றில் சென்ற படகு நீரில் மூழ்கியது. இதில், 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். மீதமுள்ள10 பேரை காணவில்லை என்று ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, காணாமல்போன 10 பேரை தீயணைப்புத்துறையினர், ஊர்மக்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில், அழகிய மணவாளன் பகுதி ஆற்றில் காணாமல்போன 10 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டனர் என்று விஏஓ ராயர் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP