குடியரசு தினவிழா: 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது!

இன்று குடியரசு தின விழாவையொட்டி, காவல்துறையைச் சேர்ந்த 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
 | 

குடியரசு தினவிழா: 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது!

இன்று குடியரசு தின விழாவையொட்டி, காவல்துறையைச் சேர்ந்த 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேரத்தினம், கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் அ.பிரகாஷ், அரியலூர் மாவட்டம் விக்ரமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருக்குமார், நாமக்கல் - சேந்தமங்கலம் காவல்நிலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் கோபி ஆகிய 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருதை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

அதேபோன்று, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெற்றதற்காக, விருது பெற்ற சேவியருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP