Logo

தமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா?

சின்னச் சின்னதாக மக்களின் மனதைக் காயப்படுத்தி ஏதோவொரு தருணத்தில் ஒட்டு மொத்தமாக வெடிக்கும் போது, உயிர் உடமைகளின் சேதாரம் மிக அதிகளவில் நடக்கும் என்பதை முந்தைய குஜராத் கலவரம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்பதை மறந்து விடக்கூடாது.
 | 

தமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா?

மதக் கலவரத்தைத் தூண்ட எல்லா வகையிலும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் வரை கேரளாவில் சபரிமலை பிரச்சினையை வைத்து மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சித்த தேசவிரோத கூட்டம், இப்பொழுது லயோலா கல்லூரி கண்காட்சி என்ற பெயரில், தேசத்தின் ஆன்மாவான ஹிந்து மதத்தினையும், தேசத்தின் உருவகமான பாரத மாதாவையும், தேசத்தின் பிரதமரையும் மிகவும் இழிவுபடுத்தி ஓவியம் படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நோக்கம் என்ன? ஏன் இப்படி செய்கிறார்கள்?

இது போன்ற செயல்களால், இரண்டு எதிர்வினைகள் நிகழும்.
 
ஒன்று அரசாங்கம் இவர்களைக் கண்டித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அப்படி எடுத்தால், காத்திருக்கும் Paid mediaக்கள் உடனே ஐயகோ, இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் போய்விட்டது. ஹிந்துத்துவ அரசு தன் கோர முகத்தைக் காட்டத்  தொடங்கிவிட்டது. மக்களே அமைதியாக இருந்த போதும் அரசு எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஹிந்துத்துவத்தைத் தினிப்பதேயன்றி வேறில்லை என குதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்த தேர்தலுக்கு இந்தப் பிரச்னையையே முன்னிறுத்தப்படும். 

இரண்டு, இப்படி சீண்டிக் கொண்டே இருப்பதால் ஆத்திரமுற்ற சில ஹிந்துத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினாலோ, கோபமுற்று அசிங்கப்படுத்தியவர்களைத் தாக்கி விட்டால் (நோக்கமே தாக்க வைக்க வேண்டும் என்பது தானே?)  அதை ஊதிப் பெரிதாக்கி கலவரமாக மாற்ற முனைவது. அல்லது நடந்த சம்பவத்தையே மதக் கலவரமாகத் திரிக்கப்பட்டு மீடியாக்கள், பாருங்கள் பாஜ ஆட்சிக்கு வந்தால் மத மோதல்கள் நிகழும் என்று போன முறையே சொன்னோம் அல்லவா என்று பெரியளவில் பாஜகவுக்கு எதிராக மக்களை திருப்புவது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எந்தவொரு நபரோ, அமைப்போ, எந்தவொரு மதத்தின் மாட்சிமையைக் களங்கப்படுத்துவதும் கூடாது.  மதச் சார்பற்ற நாட்டில் இப்படியான கீழ்த்தரமான செயல்கள் நாட்டின் வளர்ச்சியை மட்டுமன்றி, ஒருமைப்பாட்டினையும் சீரழிக்கும். இப்படி சின்னச் சின்னதாக மக்களின் மனதைக் காயப்படுத்தி ஏதோவொரு தருணத்தில் ஒட்டு மொத்தமாக வெடிக்கும் போது, உயிர் உடமைகளின் சேதாரம் மிக அதிகளவில் நடக்கும் என்பதை முந்தைய குஜராத் கலவரம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்பதை மறந்து விடக்கூடாது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP