ஏப்ரல் 19 - இல் வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று அறிவித்துள்ளது.
 | 

ஏப்ரல் 19 - இல் வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்!

12 - ஆம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள், ஏப்ரல் 19 -ஆம் தேதி காலை 9.30  மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாணவர்கள் அளித்துள்ள மொபைல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள்  எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது வழங்கிய மொபைல் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

மேலும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு ஏப்ரல் 22 -ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP