நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு! - மத்திய அரசு தகவல்

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு! - மத்திய அரசு தகவல்

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இதற்கிடையே, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க தமிழக சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றத்த்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

தொடர்ந்து, இந்த வழக்குகளின் இன்றைய விசாரணையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, சட்டமசோதாக்களின் நகல், குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிராகரித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP