தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1-ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வங்கக் கடலில் 29-ஆம் தேதி ‘போனி’ புயல் உருவாவதை தொடர்ந்து வானிலை மையம் ’ரெட் அலார்ட் ’கொடுத்துள்ளது.
 | 

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1-ஆம் தேதிகளில் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வங்கக் கடலில் 29-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதை தொடர்ந்து வானிலை மையம் ’ரெட் அலர்ட் ’கொடுத்துள்ளது.

மேலும், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை பெய்யும் என்பதால் முன் ஏற்பாடுகளுக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கையை  வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெட் அலர்ட் என்றால் ஒரு நாளில் மட்டும் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும். நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதையும் ரெட் அலர்ட் குறிக்கும்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP