அரிய ஓலைச்சுவடிகள் இணையத்தில் பதிவேற்றம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பழமையான புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
 | 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகத்தில், ஏராளமான அரிய நூல்கள், பழமையான புத்தகங்கள் உள்ளன. இவற்றை மாணவர்கள் படிக்க ஊக்குவிக்கும் வகையில், 1700க்கும் மேற்பட்ட புத்தகங்களை இணையதளத்தில் பதிவேற்ற பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இதில் 60 ஆண்டுகள் பழமையான புத்தகங்கள், 30 ஓலைச்சுவடிகள் பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தில் பதிவேற்றப்படவுள்ளன. புத்தகங்களை பதிவேற்றும் பணிகள் தொடங்கியதாகவும், இணையதளத்தில் இலவசமாக படிக்க முடியும் என்பதால் மாணவர்கள் மொபைலில் புத்தகங்களை படிக்க நேரத்தை ஒதுக்குவார்கள் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP