ராஜ்யசபா: 6 எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 | 

ராஜ்யசபா: 6 எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு அதிமுக சார்பில் முஹம்மது ஜான், சந்திரசேகர், அன்புமணி ஆகியோரும் திமுக சார்பில் சண்முகம், பி.வில்சன், வைகோ ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வைகோவுக்கு மாற்றாக திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த இளங்கோ நேற்றைய தினம் வேட்பு மனுவை திரும்ப பெற்றார். 

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இதையடுத்து, புதிய மாநிலங்களவை எம்.பிக்கள் முஹம்மது ஜான், சந்திரசேகர், அன்புமணி ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP