இமயமலையில் அடிவாங்கி வந்ததால் 8 வழிச்சாலைக்கு ரஜினி ஒகே சொல்கிறார்- துரைமுருகன்

இமயமலைக்கு சென்று அடிவாங்கி வந்துள்ளதால்தான் ரஜினி எட்டு வழிச்சாலைக்கு வரவேற்பு தெரிவிக்கிறார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 | 

இமயமலையில் அடிவாங்கி வந்ததால் 8 வழிச்சாலைக்கு ரஜினி ஒகே சொல்கிறார்- துரைமுருகன்

இமயமலைக்கு சென்று அடிவாங்கி வந்துள்ளதால்தான் ரஜினி எட்டு வழிச்சாலைக்கு வரவேற்பு தெரிவிக்கிறார் என தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, சைதை மேற்கு பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி இல்லத் திருமண விழாவில் தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன், மா.சுப்ரமணியம், எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, “துரைமுருகன், இமயமலைக்கு சென்று அடிவாங்கி வந்துள்ளதால்தான் ரஜினி எட்டுவழிச்சாலைக்கு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துயிருக்கிறார்.

முட்டை ஊழல் தொடர்பாக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர்கள் விளக்கம் தர வேண்டும். எந்த கட்சியிலும் தி.மு.க போல் ஒற்றுமையில்லை, கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர் என்று அழைப்பார்கள், காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் என்று கூறுவார்கள். ஆனால் தி.மு.க-வில் மட்டும் தான் உயிரினும் மேலான உடன்பிறப்பே என்று அழைப்பார்கள். அதனால் தான் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம்” என கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP