ரஜினியே ஒரு அதிசயம் அற்புதம் தான்! தர்பார் விழாவில் லாரன்ஸ் ஆவேசம்!

ரஜினியே ஒரு அதிசயம் அற்புதம் தான்! தர்பார் விழாவில் லாரன்ஸ் ஆவேசம்!
 | 

ரஜினியே ஒரு அதிசயம் அற்புதம் தான்! தர்பார் விழாவில் லாரன்ஸ் ஆவேசம்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருகிறது. 
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்துள்ளார். 

ரஜினியே ஒரு அதிசயம் அற்புதம் தான்! தர்பார் விழாவில் லாரன்ஸ் ஆவேசம்!
இந்நிலையில் இன்று மாலை நடைப்பெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், கடைசி வரிசையில் உட்கார வேண்டிய என்னை முதல் வரிசையில் உட்கார வைத்து அழகு பார்த்து வருகிறார். கமல் போஸ்டருக்கு சாணி அடித்து இருக்கேன். இங்க வந்து பார்த்தால் ரெண்டு பேரும் நண்பர்களாக இருக்கிறார்கள். ரெண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து இருக்காங்க. 

ரஜினியே ஒரு அதிசயம் அற்புதம் தான்! தர்பார் விழாவில் லாரன்ஸ் ஆவேசம்!
ரஜினி அதிசயம் நடக்கும் என சொன்னதை அனைவரும் பெரிய விஷயமாக பார்க்கிறார்கள். ஆனால் ரஜினியே நமக்கு கிடைத்த பெரிய அதிசயம், அற்புதம் தான். ஒருத்தர் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை பலர் வாழ்க்கையை மாற்றும். 

ரஜினியே ஒரு அதிசயம் அற்புதம் தான்! தர்பார் விழாவில் லாரன்ஸ் ஆவேசம்!
ரஜினி பண்ணும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும். ரஜினி இதுவரை யாரையாவது திட்டி பார்த்தது உண்டா? யார் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரைப்போல் தன்னடக்கம், அமைதி யாருக்கும் வராது. ரஜினிகாந்த் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கீங்களா? யாராவது 100வது படத்தில் ஆன்மிகத்தை சொல்வார்களா? ஆனால் சூப்பர் ஸ்டார் ராகவேந்திரா மூலம் சொன்னார். பாபா படத்திற்கான நஷ்டத்தை திருப்பி கொடுத்தார். யாராவது இப்படி செய்வார்களா? 

ரஜினியே ஒரு அதிசயம் அற்புதம் தான்! தர்பார் விழாவில் லாரன்ஸ் ஆவேசம்!
வந்த பதவியை வேண்டாம்னு சொல்லும் நபரை பார்த்திருக்கீங்களா. இந்த வயதில் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா? ரஜினி பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை... எல்லோரும் படத்தின் பப்ளிசிட்டிக்கு பேசுறாருன்னு சொல்றாங்க... சூப்பர் ஸ்டார் என்பதே ரஜினிகாந்த் தான்.  பிறகு என்ன பப்ளிசிட்டி வேண்டும் என்று கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP