கஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடுகளை வழங்கினார்.
 | 

கஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடுகளை வழங்கினார். 

நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் வீடுகளை இழந்து தவித்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10 பேருக்கு தலா ரூ.1.85 லட்சத்தில் 10 வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகை மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் முன்னிலையில் 10 பேருக்கும் வீடுகளின் சாவிகளை வழங்கினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP