Logo

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை! -உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

2001ம் ஆண்டு கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
 | 

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை! -உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

2001ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

பிரபல ஹோட்டலான சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஜீவஜோதி என்ற பெண்ணுடன் உறவு இருந்ததாகவும், அந்த பெண்ணின் கணவர் சாந்தகுமாரை கொடைக்கானல் அழைத்துச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களுள் ஒன்று. 

இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த  மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. சாட்சியங்கள் வலுவாக இருப்பதால் ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளது. மேலும், வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

ராஜகோபால் வழக்கின் முழு விபரம்!

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP