தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமாக நிலைகொண்டு வருவதால் அடுத்த 4 நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவி வருவதால் அடுத்த 4 நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகை பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP