தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மழை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதாவும் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மழை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதாவும் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது: மஹா புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை. லட்சத்தீவு அருகே புயல் மையம் கொண்டுள்ளதால், லட்சத்தீவுகளில் சூறைக்காற்று வீசக்கூடும். கேரளாவில் மணிக்கு 60 கி.மீ வரை காற்று வீசும். அடுத்த 48 மணி நேரத்திற்கு லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மகா புயலின் நகர்வு குறித்த விவரங்கள் ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறைந்த காற்றழுத்தம் தொடர்பாக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  மாநில பேரிடம் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளன. தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். நீர்நிலைகள் அருகே நின்று செல்ஃபி எடுப்பதை பொதுமக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் போது நாம் தங்கியிருக்கும் இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். மழை தொடர்ந்தால் மக்கள் அருகேயிருக்கும் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP