பேருந்துக்குள் கொட்டிய மழை....பயணிகளோடு சேர்ந்து ஓட்டுநர் செய்த வேலை  

திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் ஓட்டுநரும், பயணிகளும் குடைகளை பிடித்துக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.
 | 

பேருந்துக்குள் கொட்டிய மழை....பயணிகளோடு சேர்ந்து ஓட்டுநர் செய்த வேலை  

திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் ஓட்டுநரும், பயணிகளும் குடைகளை பிடித்துக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருகெடுத்து ஓடுகிறது. சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் பெய்த மழையால், அரசு பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து, அதன் வழியாக மழைநீர் பேருந்தின் உள்ளே வந்தது.

இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தாங்கள் கொண்டு வந்த குடைகளை விரித்து பிடித்துகொண்டனர். அவர்களுக்கு தான் இந்த நிலைமை என்றால், பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கும் இதேநிலைதான். குடையை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டினார் ஓட்டுநர். இந்த காட்சிகளை  எல்லாம் பார்த்த பேருந்தில் பயணித்த ஒருவர், அதை தனது செல்போனில் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP