தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, சென்னையில்....?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, சென்னையில்....?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ என்றது.

மேலும், அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 7 செ.மீ., நாமக்கல் பாப்பாரப்பட்டியில் 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், குரோம்போட்டையில் தற்போது மழை பெய்து வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP