காஷ்மீரில் பயங்கரவாதத்தை குறைக்க ராகுல் யோசனை!

காஷ்மீர் இளைஞர்களை மற்ற நாட்டின் இளைஞர்களுடன் இணைய செய்வதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீரில் பயங்கரவாதத்தை குறைக்க ராகுல் யோசனை!

காஷ்மீர் இளைஞர்களை நாட்டின் பிற பகுதி இளைஞர்களுடன் இணைய செய்வதன் மூலம் அங்கு பயங்கரவாதத்தை குறைக்க முடியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யோசனை தெரிவித்துள்ளார். 

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பேசிய ராகுல் காந்தி, " 2004 -ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீர் பற்றி எரிந்தது. அதற்கு முன்பிருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயன்றதே அதற்கு காரணம். அதன் பின் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வந்தது காங்கிரஸ். 2011 - 2013 ஆண்டு வரை ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்து காணப்பட்டன. 

புல்வாமா தாக்குதலை அரசு தடுத்திருக்க வேண்டும்.  பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டாலும், காஷ்மீர் மக்களை நேசிக்கவும் வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் அரசு, மக்களை பற்றியும் யோசிக்க வேண்டும். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை தடுக்க முடியும். காஷ்மீர் இளைஞர்களை நாட்டின் பிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைய செய்வதன் மூலம் தீவிரவாதத்தை குறைக்க முடியும்" என ராகுல் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP