ராகுலின் பேச்சை மொழி பெயர்த்த 12ஆம் வகுப்பு மாணவி... அசந்து போன ராகுல்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி, நேற்று பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
 | 

ராகுலின் பேச்சை மொழி பெயர்த்த 12ஆம் வகுப்பு மாணவி... அசந்து போன ராகுல்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி, நேற்று பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, மேடையில் பேசத் தொடங்கிய ராகுல், திடீரென தனது பேச்சை யாராவது மொழி பெயர்ப்பு செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மேடையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் புன்னகைத்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த 12 ஆம்  வகுப்பு மாணவி சஃபா செபின் தைரியமாக மேடை ஏறி, ராகுலுக்கு வணக்கம் தெரிவித்து தான் மொழி பெயர்ப்பதாக கூறினார். 

அசந்து போன ராகுல் அவரை கைகுலுக்கி வரவேற்றார். மேலும் சக மாணவர்கள் அவரை ஆரவாரத்துடன் கை தட்டி உற்சாகப்படுத்தினர். பின்னர். ராகுல் காந்தி பேசத் தொடங்கியதும், அந்த மாணவி கவனமாக கேட்டு கச்சிதமாக மொழிபெயர்த்து அசத்தினார். அந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பள்ளியில் மாணவியை பாம்பு கடித்த விவகாரம் தொடர்பாக அரசை கண்டித்து பேசினார். நிகழ்ச்சியில் பேசி முடித்த ராகுல் நன்றாக மொழி பெயர்த்ததாக மாணவியை பாராட்டினார். இது குறித்து கூறிய மாணவி, தனது வாழ்வில் இது மறக்க முடியாத நாள் என தெரிவித்தார். 

ராகுலின் பேச்சை மொழி பெயர்த்த 12ஆம் வகுப்பு மாணவி... அசந்து போன ராகுல்..

ஏற்கனவே கடந்த முறை மக்களவை தேர்தலின் போது, ராகுல் காந்தியின் பேச்சை காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தங்கபாலு, காந்திகிராம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பழனி துரை என பலர் தவறாக மொழிபெயர்த்து சமூக வலைதளங்களில் அதிக விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி தெளிவாக மொழிபெயர்த்தது, ராகுல் காந்தியை சந்தோசத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP