ஏப்ரல் 12ம் தேதி தேனியில் ராகுல் காந்தி பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி தகவல்!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 12ம் தேதி தேனி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய இருப்பதாக கே.எஸ்.அழகிரி தகவல் வெளியிட்டுள்ளார்.
 | 

ஏப்ரல் 12ம் தேதி தேனியில் ராகுல் காந்தி பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி தகவல்!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 12ம் தேதி தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய இருப்பதாக கே.எஸ்.அழகிரி தகவல் வெளியிட்டுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் ஏப்ரல் 11ம் தேதி தொடங்க இருப்பதையொட்டி, தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் ஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் தமிழகத்திற்கு வந்தார். சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் உரையாடல், அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 

இதையடுத்து, வருகிற ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாகவும், தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி இன்று தகவல் வெளியிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP