புதுச்சேரி: ஜெயலலிதாவுக்கு சிலை?

புதுச்சேரியில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
 | 

புதுச்சேரி: ஜெயலலிதாவுக்கு சிலை?

புதுச்சேரியில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

நீர் மேலாண்மைக்காக மத்திய அரசிடம் நிதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சிறப்புபேரவை கூட்டம் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று  புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்பு பேரவைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில்,  மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கப்படுமா? என அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமனுக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாராயணசாமி அறிவித்தார். 

newstmin

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP