புதுச்சேரி, நாகையில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, நாகை, திருவள்ளூர், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 | 

புதுச்சேரி, நாகையில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

புதுச்சேரி, நாகை, திருவள்ளூர், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

ஆந்திரா கரைப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், வடதமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் 50.கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, நாகை, திருவள்ளூர், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP