அக்.1ம் தேதி அரசுத்துறை ஓய்வூதியர் சங்கம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு அங்கன்வாடி கிராம ஊழியர்கள் உள்ளிட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறாத அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 | 

தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்கள் சங்க மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார் . கூட்டத்தில் ஓய்வூதியர்கள் துறை ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ஸ்ரீதரன், "அரசு பழி வாங்கும் நடவடிக்கையாக, ஓய்வுபெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தும் 17p குற்றச்சாட்டு வழங்கி அரசு ஊழியரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அரசு விதிகளுக்கு புறம்பாக ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தம் செய்வதை அரசு கைவிடவேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியம் வழங்குவது போல மாநில அரசும் வழங்கவேண்டும். மருத்துவ காப்பீடு அறுவை சிகிச்சைக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதனை தவிர்த்து அனைத்து சிகிச்சைக்கும் அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்குவதை போல, மாநில அரசும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். 

மூன்று துறைகளில் குறிப்பாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை துறை போன்றவற்றில் ஆயிரக்கணக்கான கோப்புகள் உள்ளது. இதனால் ஓய்வு ஊதியம் பெற முடியாமல் ஓய்வூதியதாரர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் ஐந்தாம் தேதி சென்னையில் அரை நாள் தர்ணா போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். 

தேச ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையில் மதநல்லிணக்க கருத்தரங்கு நடத்தப்படும். தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக நிர்வாகிகளின் கூட்டம் கூட்டி எந்த வகையில் போராட்டம் நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்படும்" என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP