இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு  நிவாரண உதவி வழங்கிடுக: ஆட்சியரிடம் மனு

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
 | 

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு  நிவாரண உதவி வழங்கிடுக: ஆட்சியரிட

இயற்கை சீற்றத்தால்  பாதிக்கப்பட்ட நபருக்கு  உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சேலத்தில் கடந்த கடந்த ஜூலை 29ம் தேதி அன்று சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாநகராட்சி நகர்நல அலுவலர் அரசு பங்களாவில் இருந்த பெரியமரம் விழுந்ததில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியாக வந்த மற்றொருவர் மதன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு இதுவரை எவ்வித மருத்துவ உதவியும், நிவாரணம் தராமல் வழக்குப்பதிவு செய்து  இன்சூரன்ஸ் தொகைகிடைக்க கூட உதவாமல் அதிகாரிகள் ஏமாற்றிவிட்டனர்.

எனவே படுகாயமடைந்து 25 நாட்களாக சிகிச்சைபெற்று வரும் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த மதன் என்ற வாலிபருக்கு நியாயம் கேட்டு வாலிபர் சங்க வடக்கு மாநகர குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் மலைவாழ் இளைஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் என். பிரவீன் குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் வடக்கு மாநகர நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP