தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து கும்பகோணத்தில் போராட்டம்

கும்பகோணம் அருகே திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம். தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூபாய் 350 கோடி கடன் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து கும்பகோணத்தில் போராட்டம்

கும்பகோணம் அருகே திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருமண்டங்குடி  திரு ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூபாய் 350 கோடி அளவிற்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக  அந்த ஆலையுடன் நேரடித் தொடர்பில் உள்ள அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து ஆலை  நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் திரண்டு இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை  வேண்டியும், முறைகேடுகளில் ஈடுபட்ட ஆலை நிர்வாகிகள் மற்றும் வங்கி அதிகாரிகளை கைது செய்ய கோரியும் ,விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP