தமிழ் மாணவர்களுக்கு எதிரான பேச்சு : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு முதல்வர் பதிலடி!

தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என்று என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
 | 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேரடி ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்து வருகிறார். 

தமிழ் மாணவர்களுக்கு எதிரான பேச்சு : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு முதல்வர் பதிலடி!

அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, "டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் அதிகளவில் செல்வதால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். அவர் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? தமிழக மாணவர்களால் தான் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது. டெல்லிக்கு முழுமையான அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்" என்று பேசினார். 

தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் பிரகாஷ்ராஜ், தமிழ் மாணவர்களுக்கு எதிராக பேசியது, உண்மையிலேயே தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "தமிழக மாணவர்கள் ஒன்றும் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை பறிக்கவில்லை. மாறாக, கல்வியில் தமிழக மாணவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் அளவுக்கு அவர்கள் திறமை உள்ளது. திறமையின் மூலமாகவே அவர்களுக்கு அங்கு படிக்க இடம் கிடைத்து வருகிறது" என்று முதல்வர் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP