நகராட்சி ஆணையர்களுக்கு பதவி உயர்வு 

நகராட்சி ஆணையர்கள் மாநகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
 | 

நகராட்சி ஆணையர்களுக்கு பதவி உயர்வு 

நகராட்சி ஆணையர்கள்  மாநகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

உதகை நகராட்சி ஆணையர் நாராயணன் பதவி உயர்வு பெற்று சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாகவும், ஒசூர் நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் பதவி உயர்வு பெற்று ஒசூர் மாநகராட்சி ஆணையரகாவும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் கண்ணன் பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வேலூர் மாநகராட்சி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP